சென்னை:
தோல்வியா... யாருக்கு... பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. எதற்காக தெரியுங்களா?


ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தை தோல்வி படம் என்று வைரமுத்து கொடுத்த வாய்ஸ்தான் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்குதான் தயாரிப்பாளர் தாணு பதிலடி கொடுத்துள்ளார். எப்படி தெரியுங்களா?


வைரமுத்துவுக்கு ஏன் இத்தனை கோபம் என்பது புரிகிறது. அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் "ஓஹோ" என்று புகழ்ந்து தள்ளியிருப்பார். வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கபாலி வெற்றிப்படம் என்பது மக்களின் அமோக ஆதரவிலிருந்து அனைவருக்கும் தெரிந்திருந்த ஒன்றாக உள்ளது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி இது என்று அதிரடித்துள்ளார் தாணு.


கபாலி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது என்பது உண்மையிலும உண்மைதான்.


మరింత సమాచారం తెలుసుకోండి: