சென்னை:
என்னை பற்றி இருக்காது... அந்த படத்தில் எதுவும் இருக்காது என்று லட்சுமி ராய் ஆக இருந்து ராய் லட்சுமியாக மாறியவர் கூறி வருவதால் கிரிக்கெட் பிளேயர் தோனியின் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனராம்.


என்ன விஷயம் என்றால்..  மங்காத்தா, காஞ்சனா, முத்திரை, ஒன்பதுல குரு என்று பல படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். பின்னர் தன் பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டார். இவர் நீண்ட நாட்களாக நானும், தோனியும் (இந்திய கிரிக்கெட் வீரர்) காதலித்தோம் என்று கூறி வருகிறார்.


இந்நிலையில் தோனி வாழ்க்கையை மையப்படுத்தி தயாரான படம் பற்றி இவர் கூறுகையில், வீண் விளம்பரத்திற்காக ’நானும் தோனியும் நண்பர்கள் தான், எங்களுக்குள் ஏதும் இல்லை.


என்னை பற்றி அந்த படத்தில் ஏதும் இருக்காது’ என்று சொல்லி வருகிறாராம். இது தோனி ரசிகர்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. எதுக்கும்மா இந்த விளம்பரம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: