சென்னை:
ஹீரோயின் கணவர் வில்லன் ஆகிட்டாராம்... ஆகிட்டாராம் என்று கோலிவுட் கோபாலு ஒரு மேட்டரை சொல்லியிருக்காருங்க...


ஜோக்கர் படம் கோலிவுட்டில் ஏற்படுத்திய வெற்றியால் புகழ் மாலை சூட்டிக் கொண்டவர் குரு சோமசுந்தரம். இவர் பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் முழுமையான ஹீரோ அந்தஸ்தை வழங்கியது ஜோக்கர் படம்தான். 


ஜோக்கர் படத்திற்கு முன்பே குரு சோமசுந்தரம் நடிப்பில் தயாரான படம் ‘ஓடு ராஜா ஓடு’. இதில் இவருடன் சாருஹாசன், நாசர், ஆனந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


லட்சுமி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் வில்லனாக சிம்ரனின் கணவர் தீபக் கோலிவுட்டுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தில் தீபக்கின் வில்லன் கேரக்டர் எடுபடுமா? இல்லியா என்பதை படம் ரிலீசான பின்னரே கூற முடியும். இது ஹிட் அடித்தால் அவர் தொடர்ந்து வில்லன் கேரக்டரில் நடிப்பார் என்கின்றனர் கோலிவுட் வாசிகள். 



మరింత సమాచారం తెలుసుకోండి: