நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, மாஜி ஹீரோயின். அவரது அம்மா அதாவது கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, கருப்பு வெள்ளை சினிமா காலத்து பிரபல ஹீரோயின். சரோஜா 50 வருடங்களுக்கு  பிறகு இப்பொஉது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவர் நடிப்பது 87 வயது கமல் அண்ணன் சாருஹாசனுக்கு ஜோடியாக.


Image result for keerthi suresh granny  with charuhaasan




புதுமுக இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கும் படம் தாதா 87. இதில் சாருஹாசன் பெரிய டெரர் தாதாவாக நடிக்கிறார். அவருக்கு போட்டி தாதாவாக காமெடி நடிகர் ஜனகராஜ் நடிக்கிறார். இவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடித்து வருகிறார். ஜனகராஜ் முத்த மகன் நவீன் காமெடியனாக அறிமுகமாகிறார். இதுபற்றி இயக்குனர் விஜய் ஸ்ரீ கூறியதாவது:


Image result for keerthi suresh granny  with charuhaasan




இது வித்தியாசமான களத்தில் உருவாகும் முழு நீள கலகலப்பு காமெடி கதை. சாருஹாசன் டெரர் தாதாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற யோசித்து பிறகு அதில் தேர்வானவர் தான் சரோஜா. இதன் படப்பிடிப்பு நடந்தபோது நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து தனது பாட்டி நடிப்பதை அமர்ந்து பார்த்து பிறகு மனதார அவரை பாராட்டி விட்டுச் சென்றார். என்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.



మరింత సమాచారం తెలుసుకోండి: