அடிக்கிற வெயிலில், வெள்ளையாக இருப்பவர்களும் கருப்பாக மாறுகிறார்கள்... இப்போது... இதை சரி செய்யும் பயனுள்ள குறிப்புகளை இன்றைய அழகு குறிப்பு தகவலில் நாம் பார்க்கலாம்.


சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். 


பாலுடன், எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.


பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.


தக்காளி பழச்சாற்றை முகத்தில் தடவி வருவதனால், முகத்தில் உள்ள கருமை நீங்கும்.


கடலை மாவையும், மஞ்சளையும் கலந்து, முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகும். 


கொத்தமல்லி இலை மற்றும் புதினா இரண்டையும் அரைத்து முகத்தில் பூசினால், முகம் அழகாகும். பருக்கள் வராது.



మరింత సమాచారం తెలుసుకోండి: