முக அழகில், உதடுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உதடுகள் அழகாக இருந்தால், முகம் இன்னும் பிரகாசமாக இருக்கும். நாம் எப்படி நமது கை, கால்களை பராமரிக்கின்றமோ, அதே போல் உதடுகளையும் பராமரிக்க வேண்டும். 


இப்போது உதடுகளுக்கான சில டிப்ஸினை பார்க்கலாம். 


1. உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மாதுளை பழத்தின் சாறை உதட்டில் தடவலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் உதடுகளை சிவப்பாக்கும்.


2. குங்குமப் பூவை பொடி செய்து அதனைஒரு துளி நீரில் ஊற விடுங்கள். ஊறியபின், அந்த நீரை எடுத்து உதட்டில் பூசி, உலர்ந்த பின்பு கழுவி வந்தால், உதடுகள் சிவப்பாக மாறும்.


3. தினமும் இரு வேளை பீட்ரூட் சாறை எடுத்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் சிவந்து, மென்மையாக மாறும்.


4. வறண்ட உதடு கொண்டவர்கள், ரோஜா இதழை பேஸ்ட் பதத்தில் மசித்து, அதனுடன் தேன் கலந்து உதட்டில் தேய்த்து வந்தால், நல்ல பலன் காணலாம்.


5. கருமையான உதடு இருப்பவர்கள், எலுமிச்சை பழச்சாற்றை உதட்டில் பூசி வந்தால், கருமை மாறும்.
 


మరింత సమాచారం తెలుసుకోండి: