தலை முடி நன்கு வளர சில குறிப்புகள் உபோயோகப்படுத்தப்படுகிறது. அதை நாம் இப்போது பார்க்கலாம். 


1. முட்டை வெள்ளை கருவுடன், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி, அலசி வந்தால் முடி நன்கு வளரும். 


2. கரிசலாங்கண்ணி, மருதாணி, கருவேப்பிலை, செம்பருத்தி இலை, நெல்லிக்காய் சாறு ஆகியவற்றை கொண்டு காய்ச்சிய, தேங்காய் எண்ணையை உபோயோகப்படுத்தி வந்தால் முடி கொட்டுவது தடுக்கப்படும். 


3. வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைத்து, தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சி பெறும், இதனால் முடி கொட்டுவது தடுக்கப்படும்.


4. நெல்லிக்காயை காய வைத்து பொடி செய்து, மருதாணி இலை பொடியுடன் கலந்து தலைக்கு தடவி, குளித்து வந்தால் முடி கருமையாக வளரும். 


5. இரும்பு சத்து நிறைந்த கீரைகள், காய்க்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்டு வந்தால், முடி நன்கு வளர்ச்சி அடையும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: