மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வெடித்து சிதறியதால் பெரும் அச்சம் உண்டானது. 


மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த ’பர்கோஸ்’ என்ற எண்ணெய் கப்பல் கோட்ஸாகோல்கோஸ் துறைமுகத்தில் இருந்து வெராகுருஸ் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கப்பல் முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் பீப்பாய்கள்தான் இருந்தது. 


போக்கா டெல் ரியோ கடலோரப் பகுதியை நெருங்கியபோது கப்பலில் திடீரென்று தீப்பிடிக்க எண்ணெய் இருந்த பீப்பாய்கள் வெடித்து சிதற தொடங்கின. பணியாளர்கள் தீயை அணைக்க செய்த முயற்சி வீணானது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் பணியாளர்கள் அவசர உதவி படகுகள் மூலம் கப்பலில் இருந்து வெளியேறினர்.


இச்சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எண்ணெய் கப்பல் தீவிபத்தில் சிக்கியதால் பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: