சென்னை:
எதுவும் செய்வோம்... எப்படியும் செய்வோம்னு களத்தில் குதித்து தன் வருமானத்தை பெருக்கி கொள்ள செமத்தியான ஆபரை கொடுத்துள்ளது விமான நிறுவனம். விஷயம் என்ன தெரியுங்களா?


தங்களின் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தவும், தங்களுக்கு வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் போட்டு இருக்கு பாருங்க ஒரு செம ஆபரை... என்ன தெரியுங்களா? ரூ.444க்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.


 
ரயில், பஸ், கடல் என்று எத்தனை பயணங்கள் இருந்தாலும்... விமானத்துல பறக்கும் போது ஏற்பட பீலிங் இருக்கே... அதுக்கு நிகர் அதுதான். இதை மைண்டில் வைச்சு இண்டிகோ நிறுவனம் ரூ.777க்கு விமானத்தில் பறக்கலாம் வாங்க... வாங்க... என்று வாய்ப்பை வழங்கியது.  அப்புறம் என்ன பறக்க நினைச்சவங்க பறந்துதாங்க.


 
நாங்க சும்மா விடுவோமான்னு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.444க்கு விமானத்துல பறக்கிற வாய்ப்பை அள்ளி கொடுத்து இருக்கு. இந்த கட்டணம் மும்பை - கோவா, டெல்லி - டேராடூன் மற்றும் டெல்லி - அம்ரிட்சர், ஜம்மு - பநீநகர், அகமதாபாத் - மும்பை ஆகிய வழித்தடங்களுக்காம். சீக்கிரமே தமிழகத்துக்கும் கொண்டு வாங்கப்பா.


మరింత సమాచారం తెలుసుకోండి: