பெங்களூரு :
மிக நீண்ட காலமாக இழுத்து கொண்டே சென்ற இந்தியாவின் கனவான அதிநவீன போர் விமானமான தேஜாஸ் விமானப்படையில் சேர்ந்திடுச்சுங்க... சேர்ந்திடுச்சு... 33 ஆண்டுகால முயற்சிக்கு தற்போதுதான் விமோசனம் கிடைத்துள்ளது. 


உள்நாட்டில் உருவாக்க வேண்டும் இலகு ரக போர் விமானங்களை என்ற இந்தியாவின் நீண்ட நாள் கனவை நனவாக்க தேஜாஸ் போர் விமான திட்டம் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. 


பல தடைகளை தாண்டி, தாண்டி இந்த விமானத் திட்டம் தள்ளிக்கொண்டே போனது. லேட்டானலும் லேட்டஸ்ட் என்பதுபோல தற்போதுதான் நினைவாகி உள்ளது. அரசுகள் மாறி மாறி வந்த போது பல பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த திட்டம் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது "தேஜாஸ்" என்று பெயர் வைக்கப்பட்டது.


இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தேஜாஸ் விமானம் சோதனைகள்... சோதனைகள் என பலகட்ட சோதனைகளை தாண்டி சுமார் 3 ஆயிரம் மணி நேரம் விபத்து இன்றி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது தான் "கிங்..." என்று நிரூபித்தது.
அப்புறம் என்ன விமானப் படையில் சேர்க்கும் தகுதி பெற்ற இந்த விமானம் விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டே விட்டது. 33 ஆண்டுகால இந்தியாவின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: