புதுடில்லி: 
புதிதாக 6 ஐஐடிக்களை தொடங்குவதற்கான மசோதா நிறைவேறியதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஜம்மு, திருப்பதி, பாலக்காடு, கோவா, தார்வாட், பிலாய் ஆகிய இடங்களில் புதிதாக ஆறு ஐ.ஐ.டி.,க்களை தொடங்குவதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.


இதற்கான மசோதாவை தாக்கல் செய்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: எஸ்.சி., - எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள், முதுகலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலே, என்.இ.டி., எனப்படும் தேசிய திறனறி தேர்வில் பங்கேற்க முடியும் என்றார். 


இந்த ஐஐடிக்கள் தொடங்கப்பட்டால் மாணவர்கள் கல்வித் திறன் மேலும் அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரவிகிக்கின்றன.



మరింత సమాచారం తెలుసుకోండి: