புதுடில்லி:
நடக்கும்... நடக்கும்... திட்டமிட்டபடி என்று வங்கி ஊழியர்கள் கண்டிஷனாக தெரிவித்துள்ளனர்.


வங்கிகள் தனியார் மயமாக்கலைக் கண்டித்தும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடத்த போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதையடுத்து ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.


ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே வரும் 29-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கும். இதில்  நாடு முழுவதும் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இப்போதும் பேச்சுவார்த்தை நடந்து அதுவும் தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: