அமெரிக்கா:
பெரும் பணக்காரர்... பெரும் பணக்காரர் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார் இவர். யார் தெரியுங்களா?


அவர் அமேஸான்  நிறுவன செயல் தலைவர் ஜெப் பெஜோஸ்தான். இவர் அமேஸான் இணையதளம் வாயிலாக குவித்த பெருமளவிலான வருமானம் மற்றும் பங்குச் சந்தையில் அமேஸானுக்கு கிடைத்த ஊக்கம் ஆகியவற்றால் உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற லிஸ்டில் இடம் பெற்று விட்டார். 


 இந்நிறுவனத்தில் 18 சதம் பங்குகளை இவர் வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் இரண்டு சதம் அளவுக்கு உயர, இவரது சொத்து மதிப்பு 65.3 பில்லியன் டாலர் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.


இதையடுத்து இவர் பெரும் பணக்காரர்களின் லிஸ்டில் 3வது இடத்தை கம்பீரமாக பெற்று விட்டார். இந்த லிஸ்டில் மைக்ரோஸாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: