புதுடில்லி:
குறைச்சுட்டாங்க... இந்த மாத கோட்டாவிற்கு குறைச்சுட்டாங்களாம். எதை குறைச்சு இருக்காங்க தெரியுங்களா?


பெட்ரோல் விலை ரூ.1.42ம்,  டீசல் விலை ரூ.2.01ம் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிர்ணய அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் இப்படி மாறி மாறி பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது அறிவிக்கின்றன. ஆனால் விலையை உயர்த்தும்போது ரூபாய் கணக்கிலும் குறைக்கும் போது பைசா கணக்கிலும் குறைக்கிறாங்க என்பதுதான் மக்களின் வேதனை.


இப்போ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 ம் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


మరింత సమాచారం తెలుసుకోండి: