மும்பை:
அடுத்த அதிர்ச்சி ஆரம்பம் ஆகிடுச்சு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால்... என்ன அறிவிப்பு தெரியுங்களா?


இதுதான் விஷயம். நாடு முழுவதும் உள்ள தேசிய வங்கிகளுக்கு அதானி குழுமம் திருப்பித் தர வேண்டிய கடன் தொகை ரூ.72,000 கோடியாம். இத்தகவலை ரிசர்வ் வங்கி "அதிர்ச்சி வெடிகுண்டு" போட்டு தெரிவித்துள்ளதுதான் அது.


 இதுகுறித்து நிருபர்களிடம் ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது? "நாடு முழுவதும் உள்ள பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் வங்கிகளிடம் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை திருப்பித் தரவில்லை. (இதே விவசாயி யாராச்சும் வாங்கியிருந்தால்... இந்நேரம் அவரை என்ன பாடுபடுத்தி இருப்பீர்கள்.)


 இவர்களில் 10 கார்ப்பரேட் கம்பெனிகள் முதலிடத்தில் உள்ளன. (இதுக்கும் முதலிடமா) உஷா இஸ்பேட், லியாய்ட்ஸ் ஸ்டீல், இந்துஸ்தான் கேபிள்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், சூம் டெவலப்பர்ஸ், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், கிரேன் சாப்ட்வேர்ஸ் இண்டர்நேஷனல், பிராக் போஸ்மி சிந்தட்டிக்ஸ், கிங் பிஷர் (விஜய் மல்லையா) மற்றும் மால்விகா ஸ்டீல் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகள் வைத்திருக்கும் கடன் தொகை ரூ.5.73 லட்சம் கோடியாகும். (இது பெரிய அணுகுண்டாக இல்ல இருக்கு)


 இவற்றில் சேராத அடுத்த பெரிய கடன் வைத்துள்ளது அதானி குழுமம் ஆகும். இவற்றின் கடன் மட்டும் ரூ.72,000 கோடியாகும். இந்த பட்டியலில் 5 கம்பெனிகள் மட்டும் திருப்பித்தராத கடன் ரூ.1.4 லட்சம் கோடியாகும்.


 அதானி கார்ப்பரேட் குழுமம் பெற்றுள்ள சலுகைகள் மிகவும் அதிகமானது. குஜராத்தில் அதானி கம்பெனி உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தையே உடமையாக வைத்துள்ளது” என்று போட்டுள்ளார் பெரிய அரிவாளாக. என்னங்க... இது இப்படி கடன் கொடுத்துவிட்டு அவங்க திணறுகிறீர்களே.


మరింత సమాచారం తెలుసుకోండి: