அமெரிக்கா:
ரெடி.. ரெடி... புதுப்பொலிவுடன் களம் இறங்குறேன் என்று மீண்டும் தயாராகிவிட்டது. எது என்று கேட்கிறீர்களா?


இதோ சொல்லிடறோம். ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் தயராகிவிட்டது என்பதுதான் அந்த செய்தி. உலகின் முதல் சமூக வலைதளம் என்ற பெருமைக்குரிய ஆர்குட் தற்போது புதிய பொலிவுடன் புதிய பெயரில் உருவாகியுள்ளது.


அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய அறிமுக வார்த்தையான ‘ஹலோ’ என்ற பெயரில் வெளியாகிறது. எப்படி... பேஸ்புக் வருவதற்கு முன்பே அனைவரும் பயன்படுத்தியது ஆர்குட்டை என்பதுதான் உண்மை.  இந்நிலையில் இதில் மேம்பாடு செய்ய வேண்டும் என்பதால் சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆர்குட் சேவை தற்போது புதுப்பொலிவுடன் புத்தம் புது பெயருடன் மீண்டும் களம் காண்கிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: