புதுடில்லி:
அவர் போய்... இவரு வந்திட்டார்... வந்திட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 


யார் போனா... யார் வந்தாங்க என்று கேட்கிறீர்களா?


இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்.4-ம் தேதியுடன் முடிவடைகிறது. இவரது பணிக்காலத்தை நீட்டிக்கலாம் என்று பேச்சு எழுந்த நிலையில் அவர் பாஜ தலைவர் சுப்பிரமணியன் சுவாமியால் விமர்சிக்கப்பட்டார். 


தொடர்ந்து அவர் அட போங்கய்யா என்பது போல் பணியை நீட்டிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். இதையடுத்து புதிய ஆளுநரை நியமிக்கும் பணிகளில் மத்திய அரசு இறங்கியது.


தொடர்ந்து மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான நிதித்துறை ஒழுங்குமுறை நியமன ஆய்வு குழு பரிந்துரையின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேல் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரிசர்வ் வங்கி 24-வது ஆளுநராக விரைவில் பதவியேற்க உள்ளார்.


இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்றவர். சர்வதேச நாணய நிதியத்திலும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக நியமிக்கப்பட்டு, பணவியல் கொள்கை துறை பொறுப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



మరింత సమాచారం తెలుసుకోండి: