சென்னை:
கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாம். எங்கு தெரியுங்களா?


வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுதடைந்துள்ளதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ளது வடசென்னை அனல் மின்நிலையம். இங்கு நாள் ஒன்றுக்கு 1830 மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 5 அலகுகள் உள்ளன. 


அவற்றில் முதல் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மீதம் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அலகின் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்ட மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த பழுதை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்று மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: