மும்பை:
ஜாயிண்ட் ஆகிறது... ஒப்பந்தம் போட்டு ஜாயிண்ட் ஆகி கலக்க உள்ளனர் என்று தகவல்கள் பரபரக்கின்றன.


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய 2 நிறுவனங்களும் வரும் செப்டம்பரில் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.


 இப்படி இணைக்கப்படும் இந்த 2 நிறுவனங்களும் 14,000 கோடி கடனை இடமாற்றம் செய்யும் நோக்கத்தில், 196 மில்லியன் பயனாளிகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2015 -16 நிதி ஆண்டு இறுதியில் 41,362.1 கோடி கடனில் உள்ளது. ஏர்செல் நிறுவன கடன் புள்ளி விபரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.


 2 நிறுவனங்களுக்கு இடையே உள்ள இணைப்பு உறுதியான ஒப்பந்தமாகும். 2 நிறுவனங்களுக்கும் இடையிலேயான பேச்சுவார்த்தை படிவங்கள் தயாராகிவிட்டது. ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஒப்பந்தம் எதிர்பார்க்கப்படுகிறது. 


7,000 கோடி செலவில் ஆரம்பிக்கும் இந்த புதிய நிறுவனத்தின் முதல் நாள் பணப்புழக்கமானது 25,000 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடத்துங்க... நடத்துங்க... 



మరింత సమాచారం తెలుసుకోండి: