எலுமிச்சை பழத்தை, நாம் எலுமிச்சை சாதம் மற்றும் ஜூஸ் செய்வதற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் இதை தவிர்த்து, எலுமிச்சை பழத்தில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளன. அதை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.


நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, நீரிழிவு வியாதி, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள், தினமும் 1 எலுமிச்சை பழ ஜூஸ் குடித்து வருவது நல்லது. 


எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.


எலுமிச்சை பழம் பித்தத்தை போக்குவதோடு, தலை வலியையும் குணப்படுத்தும். 


சரும நோய்களை, எலுமிச்சை தீர்க்கும்.


வாய் துர்நாற்றத்தை, நீக்கி, சீரான சுவாசத்தை அளிக்கிறது.


வெயிலில் சுற்றி திரிபவர்கள், எலுமிச்சை பழ சாறு அருந்தி வந்தால், உடலுக்கு வலுவான நீர் சத்து கிடைப்பதோடு, தெம்பு கிடைக்கும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: