பெரிய நோய்களின் வலியை கூட தாங்கி விடலாம். ஆனால் ஜலதோஷத்தை மட்டும் நம்மால் தாங்கி கொள்ளவே முடியாது. காரணம், ஜலதோஷம் வந்தால் ஒற்றை தலைவலி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் அனைத்தும், ஒரே நேரத்தில் வந்துவிடும். இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்பட்டு, நம்முடைய தினசரி வேலைகள் பாதிப்பாடையும். 


அத்தகைய ஜலதோஷத்தை சரி செய்ய, இங்கு பாட்டி வைத்திய குறிப்புகள் உள்ளன. அதை நாம் இப்போது பார்க்கலாம். 


கற்பூரவள்ளி இலை, புதினா இலை, மஞ்சள் பொடி ஆகிய மூன்றையும் தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, ஆவி பிடித்தால் ஜலதோஷம் சரியடையும். 


இதே போல், இரவு படுக்கும் முன்பு, காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில், மஞ்சள், நல்ல மிளகு சேர்த்து குடித்தால், நெஞ்சில் தேங்கியிருக்கும் சளி நீங்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: