சிட்னி:


ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் பகுதியில் உள்ள பவளப்பாறை திட்டுக்களை வான்வழியாக ஆராய நாசா திட்டமிட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?


விஷயம் இதுதான். ஆஸ்திரேலயா கண்டத்திற்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் குயின்லேண்ட் அருகே "கிரேட் பேரியர் ரீ்ப்" என்று அழைக்கப்படும் பவளப்பாறை திட்டுக்கள் உள்ளன.


உலகிலேயே உயிரினங்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய தனித் தொகுப்பாக விளங்குகிறது இந்த பவளப்பாறைகள். இதை விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.


இந்த பவளப்பாறைகளை புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து மனிதனின் செயல்பாடு, சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் இயற்கையால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துதான் நாசா ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்ய உள்ளது.


இந்த ஆராய்ச்சி இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் என ஆராய்ச்சி குழுவின் தலைவர் எரிக் கோக்பெர்க் தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: