இசையமைப்பாளர் ஆகயிருந்து நடிகர் ஆனவர் விஜய் ஆண்டனி. இவர் கடைசியாக நிவேதா பெத்துராஜ் ஜோடியாக கணேஷா இயக்கத்தில் திமிரு புடிச்சவன் படத்தில் போலீசாக நடித்திருந்தார். இதனை அடுத்ததாக கொலைகாரன் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுடனும், அக்னி சிறகுகள் படத்தில் நவீன் இயக்கத்தில் அருண் விஜயுடனும், தமிழரசன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Image result for vijay antony apherald

இந்நிலையில் அடுத்ததாக அவர் ஆள் படத்தை விதார்த்தை வைத்தும் மெட்ரோ என்ற படத்தை பாபி சிம்ஹாவை வைத்தும் இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் என்ற இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Image result for vijay antony apherald

இந்த படத்தை ராஜா என்பவர் தயாரிக்க, இது ஒரு அரசியல் படமாக உருவாகவுள்ளது. ஏற்கனவே விஜய் ஆண்டனி யமன் படத்தில் இரண்டு ஆண்டுகள் முன்னர் அரசியல்வாதியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: