பன்முகப்பட்ட திறமைகொண்ட நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம், சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அஷுதோஷ் கோவர்கரின் புராணகால போர்ப்படம் என்றால் அது மிகையில்லை.வரலாற்று பின்புலத்தில், பிரம்மாண்டமான செட்டுகளில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘மர்த் மராத்தா’ விரைவில் வெளியாக இருக்கிறது.

Image result for panipat movie song

‘மர்த் மராத்தா’ எனத் துவங்கும் இப்பாடல், பிரம்மாதமான இயற்கை சூழலில், ஒரு மாபெரும் கணபதி சிலையினை பின்னணியாகக் கொண்டு, அபாரமாக நடனமாடும் 1300 நடனகலைஞர்களின் பங்களிப்போடும், புனே நகரின் பாரம்பரிய மற்றும் நாட்டுபுற நடன கலைஞர்களின் நடன பங்களிப்போடும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.



கலை இயக்குனர் நிதின் தேசாய் பிரம்மாண்டமான வடிவமைப்பில், நிஜவாழ்வில் காணும் ‘சனிவார் வாடாவிற்கு நிகரான ஒரு பிரம்மாண்டமான செட்டில், ராஜு கான் நடன அமைப்பில், இந்த பாடல் 13 நாட்களில் படமாக்கபட்டிருக்கிறது. புத்துணர்வூட்டும் வகையில் ஹிந்தி-மராத்தா நடையில் உருவாகியிருக்கும் இந்த பாடலில், முக்கிய கதாப்பாத்திரங்களான அர்ஜுன் கபூர், கிரிதி சாணன், மோனிஸ் பாஹ்ல், பத்மினி கோலாபுரே ஆகியோர் நடிக்க, இசை இரட்டையர்கள் அஜய்-அதுல் இசையில் உருவாகியிருக்கிறது.




பாரம்பரிய சுவைமிக்க, எழுச்சிமிக்க இந்த பாடலை குறித்து இசை இரட்டையர்கள் பேசும் போது, ‘இந்த பாடல் மராத்தா பேரரசின் செழுமையைக் கொண்டாடுகிறது. பாரம்பரிய சுவையுடன் அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்களும் வயது வித்தியாசமின்றி, ரசனை பேதமின்றி ரசிக்கும் வகையில் இந்த பாடலை உருவாக்க விரும்பினோம். இதனை மனதில் வைத்தே, ‘மர்த் மராத்தா’ என்ற இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம். அது அனைவரையும் கவரும் என நம்புகிறோம்’.
மேலும், ‘இந்த எழுச்சி மிக்க பாடலை, மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் இயக்குனர் அஷுதோஷ் படமாக்கி இருக்கும் விதம், மறந்துப் போன மராத்தா சாம்ராஜ்யத்தின் பெருமைகளை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது’.




இந்த பாடல் குறித்து இயக்குனர் அஷுதோஷ், ‘மர்த் மராத்தா பாடல் ஒரு எழுச்சிமிக்க பாடல். அது மராத்தா சாம்ராஜ்யத்தின் செழுமையை, அழகாய் எடுத்துரைக்கும் அதே நேரம், வீரமும் எழுச்சியுமிக்க பேஷ்வா மற்றும் மராத்தா சர்தார்களை பற்றியும், இன்னபிற இராணுவ படைப்பிரிவுகளை பற்றியும், இந்துக்கள், முகமதியர்கள் பிற இன-மத மக்களைப் பற்றியும் பேசுகிறது. இசை இரட்டையர்கள் இந்த பாடலை மிகவும் அருமையாக, நேர்த்தியாக பாரம்பரிய ரசனை பாராமல், அதே சமயம் உலகளாவிய வரவேற்பு கிடைக்கும் வண்ணம் அழகாக படைத்திருக்கிறார்கள். ராஜு கானின் நடன அமைப்பும் மிகவும் பிரம்மாதமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது’



இந்த படம் 14 ஜனவரி 1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் யுத்தத்தை, மையக்கருவாக கொண்டு உருவாகியிருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படம். அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த வரலாற்றுப்படத்தை சுனிதா கோவர்கர் மற்றும் விஷன் வேர்ல்ட் சார்பாக ரோஹித் ஷேலட்கரும் இணைந்து தயாரிக்க, சஞ்சய் தத், அர்ஜுன் கபூர், கிரிதி சாணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் உலகமெங்கும் வெளியிடவிருக்கிறது. அஷுதோஷ் கோவர்கரின் எண்ணத்தில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: