டிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் வேளையில் Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் ஒளிப்பதிவாளர்  மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்த ஆட்டோ சங்கர் வெளியானபோதே பலரது கவனத்தையும் ஈர்த்தது. மனோஜ் பரமஹம்ஷா மேற்பார்வையில் அசரடிக்கும் உருவாக்கத்தில் திரைப்படத்திற்கு இணையான தரத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஆட்டோ சங்கர் பலரது பாராட்டையும் பெற்ற நிலையில் இப்போது  MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றுள்ளது.

Image result for ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது


விருது பற்றி மனோஜ் பரமஹம்ஷா கூறியதாவது...
இது தான் தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் முதல் தரமான ஒன்று. Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் என்னுடன் இணைந்து இதனை தயாரித்திருந்தார். நாங்கள் இதனை தயாரித்தற்கு பெருமை கொள்கிறோம். நாங்கள் மொத்த சீரிஸையும் பற்பல முன் தயாரிப்புகளுடன் 35 நாட்களில் சென்னையை சுற்றி ஷூட்டிங் முடித்தோம். ஆனால் கதையில் காலத்தை கொண்டு வருவதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் உழைத்தோம். 1985 முதல் 1990 வரையிலான காலத்தை கண் முன் கொண்டு வருவதற்கு பெரும் பாடுபட்டோம். இது பெரிய அளவில் கவனம் பெற்று சினிமாத்துறையில் இருந்து பலரும் பாராட்டினார்கள். தமிழின் மிகச்சிறந்த இயக்குநர் வெற்றிமாறன் இதனை தனியாக குறிப்பிட்டு பாரட்டினார். இப்போது எங்களது சிரீஸ் அடுத்த கட்ட பாராட்டை பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி. மும்பையில் நேற்று நடந்த விழாவில் சிறந்த பிராந்திய மொழி சீரிஸ் பிரிவில் ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS விருதை பெற்றுள்ளது. இவ்விருது  வருடாவருடம் ஹிந்தி மற்றும் ஏனைய பிராந்திய மொழிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.



Zee5 OTT தளத்தில் வெளியாகியிருக்கும் ஆட்டோ சங்கர் வெப் சீரிஸினை Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் மனோஜ் பரமஹம்ஷாவுடன்  இணைந்து தயாரித்திருந்தார். மலையாள நடிகர் சரத் ஆட்டோ சங்கர் வேடமேற்றிருந்தார். அர்ஜீன் சிதம்பரம், ஸ்வயம் சித்தா, ராஜேஷ் தேவ் மற்றும் பிரவீன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசையமைக்க, மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.




మరింత సమాచారం తెలుసుకోండి: