கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம்  இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.

 

நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது..

 

இந்தப்படத்தில் நடிச்சதே எனக்கு பெருமை. ஜோதிகா மேம், சத்யராஜ் சார் கூட எனக்கு காட்சிகள் இல்லைனாலும் அவங்க படத்துல நானும் இருந்ததே சந்தோஷம். கார்த்தி சார் நடிப்பதை நேரில் பார்த்து ரசித்தேன்.  ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுக்குற சிரத்தை என்னை பிரமிக்க வச்சது. படங்களை விமர்சனம் பண்றவங்க கொஞ்சம் தரம் தாழாமல் விமர்சனம் பண்ணுங்க. படம் பார்த்து தற்கொலை பண்ணிகிட்ட ஆள் இங்க யாரும் கிடையாது ஆனா படம் எடுத்து தற்கொலை பண்ணிகிட்டவங்க இருக்காங்க அதனால அத மனசுல வச்சுகிட்டு விமர்சனம் பண்ணுங்க நன்றி.

 

மாஸ்டர் அஷ்வந்த் பேசியதாவது...

 

சூப்பர் டீலக்ஸ் நடிச்சதுக்கு ரண்வீர் சிங் என்ன பாராட்டிருந்தாரு அதுக்கு தேங்ஸ். விஜய் சேதுபதி அண்ணாவும்  பாராட்டியிருந்தார் அதுக்கும்

தேங்ஸ். தம்பி படம் ரொம்ப சூப்பர் படம். கார்த்தி சாருக்கும் எனக்கும் .. படத்தில் செட்டே ஆகாது. படம் நல்லா வந்திருக்கு, பாருங்க பிடிக்கும் நன்றி.

 

ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் பேசியதாவது...

 

என்னோட மறக்க முடியாத படம் காக்கா காக்கா. இதுவரை .. கேமராவ ஜீம் பண்ணுங்க, பேன் பண்ணுங்கனு உன்னிடம் சொன்ன டைரக்ரங்க தான் அதிகம். ஆனா கேமரா நகர்த்தவே கூடாதுனு சொன்னவர் ஜீத்து ஜோசப். முதலில் அப்படி எடுக்க நிறைய சிரமப்பட்டேன். படம் முடிச்சு பார்க்கும்போது அது அழகா வந்திருந்தது. அதுல உயிர் இருந்தது. கார்த்தி நடிகர் ஆவாருனு நான் எதிர்பார்க்கல, “காக்க காக்க” காலத்தில் இருந்து அவர தெரியும். இப்ப முக்கியமான நடிகரா வளர்ந்திருக்கார்.  இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

 

 

அம்மு அபிராமி பேசியதாவது...

 

கோவிந்த் வஸந்தா சாருக்கு எனது வாழ்த்துக்கள். என்ன இந்தப்படத்துல நடிக்க வச்சதுக்கு ஜீத்து ஆருக்கு நன்றி. ஜோ மேடத்த நேரில் பார்த்ததே பெரிய சந்தோஷமா இருந்தது. கார்த்தி சார் பயங்கரமா நடிக்கிறார். இந்தப்படம் சூப்பரா இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

 

 

ஹரீஷ் பெராடி பேசியது...

 

கைதிக்கு அப்புறம் இந்த மாதிரி

 

ஒரு படத்தில நடிக்கறது ரொம்ப

சந்தோஷம். சத்யராஜ் சார்  நிறைய மலையாள படங்கள் ரீமேக் பண்ணி நடிச்சிருக்கார். அவர் மீது அண்ணா மாதிரி உணர்வு இருந்தது. இந்தப்படமே ஒரு நல்ல அனுபவமா இருந்தது. ஜீது படத்தை நல்லா எடுத்திருக்கார். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

 

நிகிலா விமல் பேசியதாவது...

 

ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சின்ன ரோல் தான் முதல்ல நடிக்க மாட்டேன்னு தான் சொன்னேன். ரொம்ப முக்கியமான ரோல், ஜோதிகா மேம், சத்யராஜ் சார், கார்த்தி சார் நடிக்கிறாங்க அதனால நடிச்சேன். கார்த்தி சார் கூட நடிச்சது சந்தோஷம். ஜோதிகா மேடம் கூட ரொம்ப பயமா இருந்தது. அவங்க சூப்பரா நடிச்சிருக்காங்க. எனக்கு ஒரு நல்ல பாட்டு தந்ததற்கு கோவிந்த் வசந்தாவிற்கு நன்றி. “தம்பி” படம் டிசம்பர்ல வருது. பாருங்க பிடிக்கும் நன்றி.

 

 

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசியதாவது...

 

உறியடி படத்துக்கு பின்ணணி இசை பண்ணினதுக்கு அப்புறம் சூர்யா சார் ஒரு லேப்டாப் கிஃப்ட் கொடுத்தார். அது தான் எனக்கு சினிமால கிடைச்ச முதல் கிஃப்ட். அந்த லேப்டாப்ல தான் தம்பி மியூஸிக் பண்ணினேன். கார்த்தி சார் ஒரு ஜீனியஸ். மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் நான் அவரோட பெரிய ஃபேன்.

ஜோதிகா மேம் கூட படம் பண்ணினது சந்தோஷம். ஜீது சார் கூட இது எனக்கு முதல் படம். படம் நல்லா வந்திருக்கு எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

మరింత సమాచారం తెలుసుకోండి: