நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-

 

நடிகை குஷ்பூ பேசும்போது,

 

நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம் என்றார்.

 

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் பேசும்போது,

 

இப்படத்தில் எனக்குப் பிடித்த விஷயம், எந்த கவலைகளும் உள்ளுக்குள் கொண்டு போகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கூறியிருக்கிறார்கள். நானும் அதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்தேன் என்றார்.

 

சண்டை இயக்குநர் பிரதீப் பேசும்போது,

 

இப்படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஏனென்றால், மற்ற படங்களில் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் சிரித்துக் கொண்டே காட்சி அமைக்க வேண்டி இருந்தது என்றார்.

 

நடன இயக்குநர் ராஜ் பேசும்போது,

 

ஆதியுடன் எனக்கு இது மூன்றாவது படம். இந்த வாய்ப்புக் கொடுத்த ஆதிக்கும், இயக்குநர் சுந்தர்.சி-கும் நன்றி என்றார்.

 

நடன இயக்குநர் சந்தோஷ் பேசும்போது,

 

‘நட்பே துணை’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கிள் பசங்க’ பாட்டிற்கு நடனம் அமைத்தேன். அதன் பிறகு இந்த படத்தின் ‘அஜ்ஜுக்கு’ பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறேன் என்றார்.

 

ஆடை வடிவமைப்பாளர் பிரீத்தி பேசும்போது,

 

‘நட்பே துணை’ படத்திற்குப் பிறகு ‘நான் சிரித்தால்’ படத்திற்கு ஆதிக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் மையக்கரு என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

 

இயக்குநர் ks.ரவிக்குமார் பேசும்போது,

 

படப்பிடிப்பு நடக்கும்போது நான் ஆதியைத் தேடுவேன். ஆனால், அவர் ஓரமாக ஆடிக் கொண்டிருப்பார். அருகே சென்று பார்த்தால் தான் பாடலுக்கு இசையமைப்பது தெரியும். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துக் கொண்டே இருப்பார் என்றார்.

 

ரவிமரியா பேசும்போது,

 

நான் எப்போதும் இயக்குநர் சுந்தர்.சி-யைத்தான் பின்பற்றுவேன். அவர் பணியின்போது தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவருடைய முழு கவனமும் பணியில் மட்டும்தான் இருக்கும். இப்படத்தில் முதல் பாதியில் வில்லனாக வருவேன். இறுதியில் காமெடியனாக மாறிவிடுவேன். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.

 

இயக்குநர் சுந்தர்.சி எப்படி மூன்று படங்களுக்கும் ஆதியை வைத்தே தயாரிக்கிறார் என்று நினைத்தேன். இப்படத்தில் நடிக்கும்போது தான் ஆதிக்கு பல திறமைகள் இருக்கிறது என்பது தெரிந்தது. இயக்குநர் ரவிக்குமார் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: