மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன்  கமர்ஷியல்  படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

 

 

இச்சந்திப்பில் நடிகர் கருணாநிதி பேசியதாவது...

 

இந்த படம் ஒரு சமூகப்படம் இந்தப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். வைரஸ் எப்படி உருவாகிறது என்பதை இப்படத்தில் எடுத்திருக்கிறோம். சமூக பிரச்சனையை இந்தப்படத்தில் எடுத்துள்ளோம்.இந்தப்படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க  வேண்டும் எனக்கேட்டு கொள்கிறேன் நன்றி.

 

நடிகர் ராதாரவி பேசியது....

 

“கல்தா” படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வர வேண்டும். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இப்போது படம் எடுப்பதற்கு பயமாக இருக்கிறது. படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். அவருக்கு வாழ்த்துகள். இயகுநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார் சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று  நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.  இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். மக்கள் பார்த்து பாராட்டினால் கண்டிப்பாக படம் ஜெயிக்கும் நன்றி.

 

 

நடிகர் ராஜ சிம்மன் பேசியதாவது...

 

இந்தப்படத்தின் பாடல்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும். ஹரி உத்ரா நன்றாக இயக்கியுள்ளார். இந்தப்படம் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் நன்றி.

 

 

நடிகர் ஆண்டனி பேசியதாவது...

 

மேற்கு தொடர்ச்சி மலை படத்தை நீங்கள் தான் ஜெயிக்க வைத்தீர்கள். அந்தப்படம் தான் என்னை பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றது. சம்பாதிப்பதை விட கிடைத்திருக்கும்  மரியாதையை கெடுத்து விடக்கூடாது என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு இந்தப்படம் தான் நடித்துள்ளேன். ஹீரோ கடுமையாக உழைத்துள்ளார் அவர் நன்றாக வர வாழ்த்துகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

 

நடிகை திவ்யா பேசியது....

 

இந்தப்படத்தில் இயக்குநர் இரவு பகலாக தூக்கமே இல்லாமல் உழைத்துள்ளார். படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய ஒரு படம் நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

మరింత సమాచారం తెలుసుకోండి: