ஒரு பிரபல பொன்மொழி இருக்கிறது “நமது பெருங்கவலைகள் பலதும்  நாம் அதிகமாக யோசிப்பதால் உண்டாவது”  என்று. நமது தற்போதைய  அச்சகரமான சூழ்நிலை இதை அப்பட்டமாய் நிரூபிக்கிறது.  இணைய ரேடியோவில் Jiosaavn நிறுவனத்தின்  RJ பாலாஜி தொகுத்து வழங்கும் “Mind voice நிகழ்ச்சியில் (Run away) “தெறித்து ஓடு” எனும் தலைப்பில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பற்றி கலப்பாக பேசியிருக்கிறார். இந்த கொரோனா  வைரஸை பற்றியே  எல்லோரும் பேசி  வரும் நிலையில் அச்சமும் சூழ்ந்து வர, அதனை விட பெரும் பகடியாய் வெறொன்று மாறியுள்ளது. எல் கே ஜி படத்தில் ஒரு காட்சியில் “ஓடு வைரஸே” என வைரஸ்க்கு எதிராக போராடும் காட்சி வரும். நாஸ்டடார்மஸ் முன்கணிப்பு போல் அது தற்போது உண்மையாகியுள்ளது. சில இளைஞர்கள் பட்டாளம் “ஓடு கொரோனா ஓடு” என ஓங்கி சத்தம் போட்டு போராடி வரும் காமெடி நிகழ்ந்துள்ளது. இதனை அப்படியே தன் நிகழ்ச்சியில் இணைத்து கலாய்த்துள்ளார் RJ பாலாஜி. இதில் உச்சபட்ச கலாய்ப்பாக இந்த கூட்டத்தில் ஒருவர் கடுமையாக தும்மினால் என்னவாகும்  என்று கேட்டது பெரும் நகைச்சுவையாக அமைந்தது. மேலும் அவர் ‘கடந்த ஞாயிறு இரவுக்காட்சி நானும் பஞ்சுமிட்டாயும் சத்யம் திரையரங்கில் தப்பாட் ( Tappaad) படத்திற்கு போயிருந்தோம். சத்யம் திரையரங்கின் அடையாளம்  மசாலா பொடி தூவிய பாப்கார்ன். ஆனால் அது தூவும்போது ஒருவருக்கு தும்மல் ஏற்பட, அங்கிருந்தவர் அவருக்கு கொரோனா இருக்கிறது என கலாட்டா செய்து விட பெரும் பிரச்சனையாகவும்,  கலகலப்பானாதகவும் ஆகிவிட்டது. நாம் பயப்படும்படி சூழ்நிலை ஒன்றும் கடினமானதாக இல்லை. சமூக வலைதளங்களில் பரவும் வதந்ததிகளை நம்பாமல் அதிகம் யோசிக்காமல் இருந்தாலே போதும்’ என்றார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: