அமெரிக்கா:
அடப்பாவிங்களா? ஏன்யா... இப்படி செய்யறீங்க என்று அமெரிக்க மக்கள் கொதித்து போய் உள்ளனர். காரணம் என்ன தெரியுங்களா?


ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் வில் ஸ்மித். இவரின் மகன் யார் தெரியுங்களா? கராத்தே கிட் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அந்த சுட்டிதான்... யெஸ்... ஜேடன் ஸ்மித்தான். இந்த ஒரே படத்தில் மூலம் உலக புகழ் அடைந்த சிறுவன் என்றால் மிகையில்லை.


இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள செய்தி தளம் ஒன்று ஜேடன் ஸ்மீத் தற்கொலை செய்துவிட்டதாக ஒரு செய்தியை பரப்ப... இதனால் அனைவரும் உச்சக்கட்ட அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஜேடன் ஸ்மித் நலமாக தான் உள்ளார். இது வதந்தி... யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்த பின்னர்தான் டென்ஷன் குறைந்துள்ளனர் மக்கள். 


அந்த செய்தி தளம் எப்போதும் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதால் அமெரிக்க மக்கள் கடும் கோபத்தில் உள்ளனராம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: