ஜப்பான்:
கவுரவ ஆஸ்கார் விருதை பெற போகிறார் ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 


தற்காப்புக் கலையை சினிமாவில் பயன்படுத்தி பிரபலமானவர் ஜாக்கி சான். உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் இவருக்கு இரண்டாம் இடம் என்றால் பார்த்துக்கொள்ளுங்க. 


தற்போது ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கார் விருதை அறிவித்துள்ளது அகாடமி ஆப் மோட்சன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ். வழக்கமாக கொடுக்கும் ஆஸ்கார் விருது இல்லியாம். இந்த விருது ஜாக்கி சானின் சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் அறிவிச்சிருக்காங்களாம். 


ஜாக்கிசான் இதுவரை ஒருமுறை கூட ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பர் 12ம் தேதி இந்த கவுரவ ஆஸ்கார் விருது வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: