நியூயார்க்:
பிறந்தா ஆங்கில பட ஹீரோவாக பிறக்கணும் என்று கோலிவுட் வாசிகள் நொந்து கொள்கின்றனர் இந்த செய்தியை கேள்விபட்டதில் இருந்து... அது என்ன செய்தி என்கிறீர்களா?


ஜேம்ஸ் பாண்ட் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்காக டேனியல் கிரேக்கிற்கு 150 மில்லியன் டாலர்கள் (நம்ம இந்திய மதிப்பில் ரூ.1,350 கோடி ) சம்பளம் வழங்க தயாரிப்பாளர் தரப்பு முன்வந்துள்ளதாம். வாயை பிளக்காதீங்க...


அடுத்த 2 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிப்பதற்காக மட்டும்தான் இந்த தொகை. 1962-ல் டாக்டர் நோ படத்தில் சீன்கானரி... ஜேம்ஸ்


பாண்டாக நடித்திருந்தார். 6 படங்களில் அவர்தான் ஜேம்ஸ் பாண்ட். அதற்கு பிறகு வந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பலர் நடித்துள்ளனர்.


2006-ல் வெளியான கேசினோ ராயல் படத்திலிருந்து டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்து வருகிறார். இது ஸ்பெக்ரே வரை தொடர்ந்தது. ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் இவர் சிறப்பாக நடிப்பதால் அவரையே தொடர்ந்து ஜேம்ஸ் பாண்டாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் ரொம்பவே கோரிக்கை விடுத்துள்ளதாம்.


அதனால்தான் 2 படங்களில் நடிக்கிறதுக்கே... அம்புட்டு பணம் தர தயாராக இருக்காங்களாம்... வசூலில் அள்ளிடுவாங்க இல்ல...



మరింత సమాచారం తెలుసుకోండి: