சென்னை:
விரட்டி பிடிக்க வந்து கொண்டிருக்கிறது இருமுகன் என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்லியிருக்காங்க... எதற்காக தெரியுங்களா?


தமிழ் சினிமாவின் கௌரவமே பாக்ஸ் ஆபிஸில் என்ற வசூலில்தான் அடங்கி இருக்காம். இதில் விஜய், அஜித் ஆகியோருக்கு இடையேதான செம போட்டி நடந்து வருகிறது. 


ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே சீயான் விக்ரமும் சைலண்டாக இந்த போட்டியில் விரட்டிக்கிட்டு வர்றாராம். எப்படி தெரியுங்களா? தற்போது இருமுகன் சென்னையில் மட்டும் ரூ.5.7 கோடியை அள்ளியுள்ளது.


வேதாளம் சென்னையில் ரூ.6.7 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 125 கோடி வரை வசூல் செய்திருந்தது. இருமுகன்... ஏற்கனவே ரூ 106 கோடி வசூல் செய்ய, வேதாளம் வசூலின் சாதனையை முறியடிக்க "ஸ்பீடாக" வந்துக்கொண்டு இருக்காம்...



మరింత సమాచారం తెలుసుకోండి: