இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. 


இந்நிலையில் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்பட இயக்குனர் ராம்பாலா இயக்கவுள்ள புது படத்தில் ஜிவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஸ்டீபன்  தயாரிக்கவுள்ளார். 


இதில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை ஜெனிலியா இருவரும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெனிலியா இந்த புது தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: