சென்னை: 
அங்கு... இங்கு... என்று ரிலீஸ் ஆகும் என்று பார்த்தால் அதையும் தாண்டி இல்ல போயிடுச்சு. ரஜினிக்கு பிறகு இவர்தான்ப்பா... என்று கோலிவுட் கோகிலாக்காக சொல்லியிருக்காங்க...


யாரை பற்றி தெரியுங்களா? நம்ம சிவகார்த்திகேயனை பற்றிதான். சின்னத்திரையில் தடம் பதித்து இப்போது வெள்ளித்திரையில் வெற்றிநாயகனாக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். 7 படத்திலேயே எட்டாத உயரத்திற்கு செல்வார் என்று யாராச்சும் நினைச்சு பார்த்து இருப்பார்களா. இதை அதிர்ஷ்டம் என்று சொல்ல முடியாது. அவரின் கடும் உழைப்பும் இருக்கிறது.


தற்போது இவர் நடித்த ரெமோ படம் ஜப்பானில் நகோயா பகுதியில் உள்ள திரையரங்கில் மதியம் 2 மணிக்கு திரையிடப்படுகிறதாம். இது எப்படி இருக்கு. ஜப்பானில் இந்த பகுதியில் ரஜினி படத்திற்கு பிறகு ரிலீஸ் செய்யப்படும் ஒரே தமிழ் படம் ரெமோ தானாம். பாராட்டுக்கள் சிவகார்த்திகேயன்.


మరింత సమాచారం తెలుసుకోండి: