விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் அண்மையில் வெளிவந்தது. இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூலில் சாதனை படைத்து வருகின்றது. 


இதையடுத்து வரும் அக்டோபர் 7-ந்தேதி, அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'றெக்க' ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அடுத்து அவர் மூன்று திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கவுள்ள திரைப்படத்திலும், 'புஷ்கர் காயத்ரி' இயக்கவுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படத்திலும், 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


மேலும் 2016-ம் ஆண்டில், தமிழ் சினிமாவிற்கு பல ஹிட் படங்களை தொடர்ந்து அளித்த விஜய் சேதுபதி, அடுத்த ஆண்டும் இதேபோல் பல வெற்றி படங்களை அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: