சென்னை:
காதலிக்கணும்... என்னை காதலிக்கணும் என்று இயக்குனர் ஒருவர் கட்டாயப்படுத்தியதால் நடிகை தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்று தகவல் சொல்றாங்க கோலிவுட் வாசிகள். ஆனால் இது உண்மையா என்பதை அந்த நடிகைதான் விளக்க வேண்டும்.


நெடுநெல்வாடை, பட்டதாரி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் அதிதி. இவரை ஒரு தலையாக காதலித்து வருகிறாராம் ஒரு படத்தின் இயக்குனர். இவரது டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்துள்ளது. நீ என்னை காதலித்தே ஆக வேண்டும் என்று அதிதியை அவர் கட்டாயப்படுத்தி உள்ளார்.


இதனால் டென்ஷன் ஆன நடிகை இயக்குனருக்கு பளார் விட... அந்த இயக்குனரும் சாலை என்று கூட பார்க்காமல் அதிதியை அடித்து தாக்க... பொதுமக்கள் காப்பாற்றி உள்ளனர். மீண்டும் டார்ச்சர் அதிகரித்ததால் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார் அதிதி. இதுதான் தற்போது கோலிவுட்டின் பெரும் பரபரப்பு செய்தியாம்... செய்தியாம்....



మరింత సమాచారం తెలుసుకోండి: