தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், நடிகை தமன்னா 'தர்மதுரை' திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் அவர் பிரபு தேவா உடன் இணைந்து நடித்த 'தேவி' திரைப்பட ப்ரோமோஷன் விழாவில் மட்டும் பங்கேற்றுள்ளார். 


இது எந்த விதத்தில் நியாயம்?... என்று  தமன்னா மீது அவர் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக பல்வேறு செய்திகள் நேற்று வெளிவந்து கொண்டிருந்ததை நாம் அறிந்தோம்.


ஆனால் தற்போது இதை அறிந்த ஆர்.கே.சுரேஷ் இதற்கு தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 'இந்த செய்தி எல்லாம் பொய். யார் மீதும், நான் நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கவில்லை. வீணான வதந்திகளை கிளப்ப வேண்டாம்' என கேட்டு கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: