சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரனுக்கு, ரீ என்ட்ரி பெரிதாக கை கொடுக்கவில்லை. அழுத்தமான கேரக்டரில் நடித்து, பிரபலமாக நினைக்கும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. 


இதனால் அவர் தனது கணவர் தீபக்கை, தற்போது வில்லனாக களமிறக்கியுள்ளார். 'ஓடு ராஜா ஓடு' என்ற திரைப்படத்தில், தீபக்கை வில்லனாக்கியுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், நிஷாந்த், ஜதீன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹீரோவாக 'ஜோக்கர்' திரைப்படத்தில் நடித்த சோம சுந்தரம் நடித்துள்ளார். 


மேலும் காமெடி கதையை கொண்டு உருவான இந்த படத்தில் நாசர், சாரு ஹாசன் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 


தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளதால், சிம்ரன் தனது கணவர் தீபக்கை முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க வைக்க சான்ஸ் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: