நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் மஹானடி படத்தில் நடித்து வருகிறார். பழம்பெரும் நடிகையான சாவித்ரி அவர்களின் வாழ்க்கை திரைப்படமான இதனை  நாக் அஸ்வின் இயக்க, கீர்த்தி சாவித்ரியாகவும், மலையாள நடிகர் துல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீசர் காணொளி நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், கீர்த்தி ஆச்சு அசலாக சாவித்ரி ஆகவே மாறியிருந்ததும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. 


Image result for keerthi suresh apherald


 கீர்த்தி அடுத்ததாக, ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளிவர உள்ளது. இந்நிலையில் திரையுலகத்தில் சமீபத்திய பரபரப்பு என்னவென்றால், இதுவரையில் குடும்ப பங்காக மட்டுமே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், முதல் முறையாக சாமியில்  படு கவர்ச்சியாக நடிக்க உள்ளாராம். 


Image result for keerthi suresh apherald


நீச்சல் உடை காட்சி, மற்றும் இடை அழகை காட்டி ஆடும் பாடல் காட்சிகள் என கீர்த்தி கலக்கவிருப்பதாக, நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது. சாமி முதல் பாகத்தில் கவர்ச்சி மழை மூலமாக தான் த்ரிஷா சின்ன சிம்ரனாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், இனி கவர்ச்சி குத்தாட்டம் போடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம். 



మరింత సమాచారం తెలుసుకోండి: