மோகன் ராஜாவின் வேலைக்காரன் படத்தில், சிவ கார்த்திகேயனின் ஜோடியாக நடித்தார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இதை தொடர்ந்து அடுத்ததாக, மீண்டும் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்திலும் நயன்தாரா தான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.


Image result for nayantara apherald


 இப்படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே, சிவா மனசுல சக்தி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் இப்பொழுது வெளிவந்துள்ளது. இப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை பற்றிய தகவல் தான் அது. 


Image result for nayantara apherald


வேலைக்காரனில் பொறுப்பான ஒரு பெண்ணியவாதி மிருணாளினியாக நடித்த நயன்தாரா, இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்தில், நடிகை வியாசாந்தி நடித்த கதாபாத்திரம் போன்ற ஒரு திமிரான பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

Image result for nayantara apherald


நயன்தாரா இதற்கு முன்னர், ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த பிளாக்பஸ்டர் படமான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார். மேலும் ராஜேஷ் தான் சிவ கார்த்திகேயனின் முதல் பெரிய ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு வசனம் எழுதியவர். இந்த புதிய கூட்டணி வெற்றி பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 



మరింత సమాచారం తెలుసుకోండి: