நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன், அடுத்ததாக தனது பிளாக்பாஸ்டர் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2வில் நடிக்கவுள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும்  இப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. 


Image result for nayantara apherald


முதல் பாகத்தில் கமல், அப்பா - மகன் என ரெட்டை வேடங்களில் நடித்திருப்பார். சுதந்திர போராட்ட வீரர் அப்பா, சமூகத்தில் பரவிக்கிடக்கும் லஞ்ச பெருச்சாளிகளை களையெடுக்க துவங்க, தன் அன்பு மகனே ஒரு லஞ்சம் வாங்கும் குற்றவாளியாக இருக்க, மன்னிக்காமல் அவனையும் தண்டிக்கும், சேனாபதி என்ற இந்தியன் தாத்தாவாக  ஜொலித்திருப்பார் கமல். 


Image result for nayantara apherald


அப்படத்தில் அப்பா கமலுக்கு ஜோடியாக, சுகன்யா வயதான ஒரு தோற்றத்தில் நடித்திருப்பார். இப்பொழுது இந்தியன் 2 படத்திற்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுகள் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்திய செய்தி என்னவென்றால், சுகன்யா போல இப்படத்தில் நயன்தாராவுக்கு வயதான பாத்திரம் என்றும், படம் முழுவதும் அந்த வயதான மேக்கப்புடன் தான் நடிக்க வேண்டும் என்றும், கூறப்பட்டதாம். இதனை கேட்டதும் தலை சுற்றி போன நயன்தாரா, இந்தியன் 2வில் நடிக்கலாமா வேண்டாமா, என்று ஆலோசித்து வருகிறாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: