ஆந்திர அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ், மானாட மயிலாட தொலைகாட்சி நடன நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்று பின்னர் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் ஓடாமல் போனாலும் துவளாது, தனது முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே வந்தார். பண்ணையாரும் பதமினியும், ரம்மி போன்ற படங்களில், தனது சிறிய வேடங்களில் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது காக்கா முட்டை படம். 



குப்பத்து பெண்ணாக ,இரண்டு சிறுவர்களின் தாயாக, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ,ஐஸ்வர்யா ராஜேஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் பின்னர் விஜய் சேதுபதி ஜோடியாக தர்மதுரை படத்தில் ஒரு கிராமத்து வேடத்தில் நடித்து ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டார். தற்பொழுது சிவ கார்த்திகேயன் தயாரிப்பில் வரும் முதல் படமான கனா படத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கவுள்ளார். 



நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இயக்கும் முதல் படமான இப்படத்தில், அவர், கிராமத்திலிருந்து வந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் ஒரு பெண்ணாக நடிக்கவுள்ளார். கனா படத்திற்காக ஐஸ்வர்யா பல பயிற்சிகளை  முறையாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சத்யராஜ் ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக நடிக்கிறார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: