இந்த ஆண்டின் முன்னணி கதாநாயகி யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல் சமந்தா தான். நடிகர் நாகா சைதன்யாவுடன் இவரது திருமணம் நடந்த பின்னர் இவர் நடித்த படங்களான ரங்கஸ்தலம் ,மஹானடி, மற்றும் இரும்புத்திரை ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தின.

Image result for samantha apherald

இந்நிலையில் இவரது அடுத்த தமிழ் படமான சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடித்த பொன்ராமின் சீமராஜா விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடாக வரவுள்ளது. இன்று சமந்தாவின் அடுத்த படமான யூ டர்ன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

Image result for samantha apherald

இத்தோடு பவன் குமார் இயக்கியுள்ள இந்த படமும் அதே விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடாக செப்டம்பர் பதிமூன்றாம் தேதி வெளியாக உள்ளது. இதனால் சமந்தா ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று ரெட்டை பரிசு காத்திருக்கிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: