நடிகை ராஷி கண்ணா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பெரிய ஹீரோக்கள் யாருடனும் இன்னும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கின் முக்க்கியமான கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். தொலி பிரேமா மற்றும் ஊக குடகுசலாடி ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா அவரது கொழுக் மொழுக் தேகத்தாலும் ,கவர்ச்சியால், க்யூட் ரியாக்ஷன்களாலும் பெயர் பெற்றார்.

Image result for raashi khanna

இந்நிலையில் இவர் தமிழிலும் கால் பதிக்க உள்ளார். ஆகஸ்டு முப்பதாம் தேதி வர உள்ள லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் படமான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா முரளியின் ஜோடியாக நடித்துள்ளார். இதனை அடுத்து சித்தார்த் ஜோடியாக சைத்தான் கே பச்சா படத்தில் காமெடியான வேடத்தில் நடித்துள்ளார். மூன்றாவது படமாக நடிகர் விஷால் ஜோடியாக அயோக்கியா என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

Related image

இந்த படம் தெலுங்கில் ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக்காகும். தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த வேடத்தில் தமிழில் ராஷி கண்ணா நடிக்க உள்ளார். ஹன்சிகாவை போலவே கொழுக் மொழுக் என்று இருப்பதால் ராஷி கண்ணா தான் அடுத்த ஹன்சிகா என்று கூறி பல இயக்குனர்களும் அவரை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: