நடிகை அணு இம்மானுவேல் மலையாளத்தில் ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை அடுத்து எ வர தெலுங்கில் அறிமுகமாகி மஜ்னு என்ற வெற்றி படத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்தை அடுத்ததாக இவர் நடித்த படங்களான ஆக்சிஜன், அஃஞ்ஞாதவாசி, நா பேரு சூர்யா உள்ளிட்ட படங்கள் ஆடு தோல்வியை அடைந்தன.



சமீபத்தில் கீதா கோவிந்தம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் கெஸ்ட் ரோல் கூட செய்தார். சென்ற ஆண்டு தமிழில் மிஷ்கினின் இயக்கத்தில் விஷால் ஜோடியாக துப்பறிவாளன் படத்தில் அறிமுகம் ஆனா இவர் விக்ரம் ஜோடியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.



இந்நிலையில் இவரது இரண்டாவது தமிழ் படமாக நடிகர் தனுஷ் இயக்க உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த வரலாற்று படத்தில் அதிதி ராவ் ஹைதாரி மெயின் ஹீரோயினாக நடிக்க எஸ்.ஜெ.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்க உள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: