நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். சுந்தர பாண்டியன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, குட்டி புலி என பல ஹிட் படங்களிலும் நடித்தார்.

Image result for laxmi menon apherald

சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு, தல அஜித் தங்கையாக வேதாளம் என வெற்றி படங்களாக நடித்து தள்ளினார். ஆனாலும் கூட இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெரிதாக படங்கள் எதுவும் அமையவில்லை. கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி ஜோடியாக மிருதன் படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக ரெக்கை படத்திலும் நடித்தார்.

Image result for laxmi menon apherald

பிரபு தேவா ஜோடியாக நடித்த சுங் மாங்  படமும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவருக்கு பெரிய பரிசாக அடுத்ததாக இவர் தனுஷ் ஜோடியாக முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ராட்சசன் படத்தை அடுத்து வர உள்ள இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஆகும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: