நடிகை நிவேதா பெத்துராஜ் அடியே அழகே பாடலின் ஹிட்டை தொடர்ந்து ரியல் ஹிட் எதுவும் இல்லாமல் திண்டாடி வந்தார். தெலுங்கில் நடித்த படமான மெண்டல் மதிலோ படம் கூட படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் தான் இந்த ஆண்டு வெளியான விண்வெளி படமான டிக் டிக் டிக் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.



இந்த படத்தில் ஹாட்டான கவர்ச்சியான விண்வெளி வீராங்கனையாக நடித்த நிவேதாவுக்கு இந்த படம் முதல் ஹிட்டாக அமைந்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த அவதாரமாக இவர் காவல் துறை அதிகாரியாக விஜய் ஆண்டனியின் ஜோடியாக திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ளார்.



நாளை வெளியாக உள்ள இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் நிவேதா பெத்துராஜின் நடிப்பை பாராட்டி உள்ளனராம். சப் இன்ஸ்பெக்டர் மடோனா என்ற வேடத்தில் நடித்துள்ளாராம் கவர்ச்சி நாயகி நிவேதா பெத்துராஜ். 


మరింత సమాచారం తెలుసుకోండి: