நடிகை காஜல் அகர்வால் சமீப காலமாக பெரிய ஹீரோக்களுடன் படங்கள் எதுவும் அமையாமல் உள்ளார். தற்பொழுது தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற ஹீரோயின் படத்தில் நடித்துள்ளார்.



மேலு தெலுங்கில் சில படங்களே நடித்த பிளாப் ஹீரோவான பெல்லம்கொண்டார் சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக இரண்டு படங்களிலும் எங்கேயும் எப்போதும் புகழ் ஷர்வானந்தின் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.



இந்நிலையில் இவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு பெரிய ஹீரோ படம் ஒன்று இவரை தேடி வந்துள்ளது. தெலுங்கு மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் ஜோடியாக இயக்குனர் ஆனந் இயக்க உள்ள படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.



ஏற்கனவே இவர் ரவி தேஜாவுடன் ஜோடியாக வீரா மற்றும் சாரோச்சாறு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்கலாம் இந்த படமாவது காஜலுக்கு ஹிட்டாகுமா என்று. 


మరింత సమాచారం తెలుసుకోండి: