நடிகர் சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் விரைவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகா உள்ளார். சென்ற ஆண்டு வெளியான தெலுங்கு சூப்பர்ஹிட் படம் அர்ஜுன் ரெட்டி. அறிமுக இயக்குனர் சந்தீப் வான்காவின் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் அறிமுக நாயகி ஷாலினி பாண்டேவும் நடித்த இந்த படம் மூலமாக விஜய் தேவரகொண்டா டோலிவுட்டின் சென்சேஷன் ஆனார்.

Related image

அர்ஜுன் ரெட்டி படமும் பிளாக்பஸ்டர் ஆனது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் மூலமாக தான் துருவ் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை சீயான் விக்ரமுக்கு சேது மூலம் மறுவாழ்வு அளித்து, பிதாமகன் மூலமாக தேசிய விருது பெற்று தந்த இயக்குனர் பாலா தான் இயக்க உள்ளார்.

Image result for varma movie

இதில் நாயகியாக அறிமுக நாயகி மேகா சவுதரி நடிக்க உள்ளார். மேலும் காலா புகழ் ஈஸ்வரி ராவ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்பொழுது வர்மா படத்தை காதலர் தினத்தன்று வெளியிட திட்டம் உள்ளதாக செய்திகள்  குவிந்த வண்ணம் உள்ளன. 


మరింత సమాచారం తెలుసుకోండి: